விஜய் தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த சில வாரங்களாக வனிதா, கஸ்தூரியின் வருகையால் பிக்பாஸ் வீடு மிகுந்த பரபரப்பாக காணப்பட்டது.

கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து தன்னைத் தானே துன்புறுத்திக்கொண்டதாக மதுமிதா வெளியேற்றப்பட்டார். அதனைத் தொடர்ந்து எவிக்ஷன் மூலமாக அபிராமியும் வெளியேறினார்.

இந்த வாரம் எவிக்ஷனுக்காக சேரன், கஸ்தூரி, தர்ஷன், சாண்டி உள்ளிட்டோர் நாமினேட் செய்யப்பட்டனர். இதில் தற்போது தர்ஷன், சேரன், சாண்டி உள்ளிட்டோருக்கு ரசிகர்களின் ஆதரவு பெரும் அளவில் இருக்கிறது.

ஆனால் கஸ்தூரியை பொறுத்தவரை அவர் பிக்பாஸ் வீட்டுக்குள் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. எனவே பிக்பாஸ் வீட்டை விட்டு அவர் வெளியேறுவதற்கு பெரிய அளவில் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

ஒரு வழியாக பிக் பாஸ் ஆரம்பித்து கிட்டத்தட்ட அறுபது நாட்கள் மேலாக சேரன் இன்னும் ஒரு முறை கூட கேப்டன் ஆகவில்லை என்று வருத்தப்பட்ட சேரன் ஆர்மிக்கு மிக பெரிய சந்தோசம் சேரன் தான் வரும் வாரம் கேப்டன்.

Related