லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 64வது படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். இதனால் இப்படம் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகி இருக்கிறது. பல படங்களில் நடித்து வரும் விஜய் சேதுபதி, இந்தப்படத்திற்காக விஜய், தன்னை அழைத்ததால் சில படங்களை தள்ளி வைத்துள்ளார். அதனால், தீபாவளிக்கு முன்பே இந்த படத்தில் நடித்து முடித்து விட திட்டமிட்டுள்ளார்.

சமீபத்தில் துவங்கிய இப்படத்தில் முதலில் விஜய், விஜய் சேதுபதி சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்க தொடங்கி உள்ளார் லோகேஷ் கனகராஜ். பொதுவாக வாரத்தில் ஒருநாள் படப்பிடிப்புக்கு ஓய்வு கொடுக்கும் விஜய், விஜய் சேதுபதியின் கால்ஷீட்டிற்காக ஒருநாள் கூட இடைவெளி கொடுக்காமல் தொடர்ச்சியாக நடிக்க முடிவு செய்திருக்கிறாராம்.

Related