தமிழ் சினிமாவில் சில இயக்குனர்கள் தான்காவிய இயக்குனர்கள் என்று பெயர் எடுத்தவர்கள் அந்த வரிசையில் 60 மற்றும் 70 வரிசைகளில் பல இயக்குனர்கள் இருந்தனர். பின்னர் கே.பாலச்சந்தர் வந்தார் எதற்தங்களையும் வாழ்கை தரத்தையும் கூறினார் அதை தொடர்ந்து கிராமத்து வாசத்தை நமக்கு கொடுத்தவர் என்றால் அது பாரதிராஜா இவர்களின் வரிசையில் முற்றிலும் மாறுபட்டு யதார்த்த வாழ்கை மட்டுமே படங்களாக கொடுத்தவர் என்றால் அது பாலுமகேந்திரா இவர் படங்களில் உண்மையும் வாழ்கையின் எதார்த்தமும் இருக்கும் அது காதல் படங்களாக இருந்தாலும் சரி சமுக படங்களாக இருந்தாலும் சரி இவரின் பட்டறையில் வந்த இயக்குனர்களும் அவரின் வழி வரவில்லை இவர்களும் வர்த்தக ரீதியான படங்களை மட்டுமே கொடுத்தனர்.

ஆனால் முற்றிலும் வித்தியாசமாக பாலு மகேந்திரா வழியில் ஒரு யதார்த்த படத்தை டூலெட் என்று பதிவு செய்துள்ளார்.ஒளிப்பதிவாளர் இயக்குனர் செழியன் ஆம் நீண்ட நாளுக்கு பின் மிகவும் அருமையான வாழ்கை பதிவு என்று தான் சொல்லவேண்டும் அப்படியான ஒரு படம்.

பாலுமகேந்திரா பட்டறையில் வந்த பாலாவின் பரதேசி படத்தின் ஒளிப்பதிவாளர் தான் செழியன் அதோடு அவர் மிக சிறந்த எழுத்தாளர் பல ஆவன படங்களை இயக்கிய இவர் முதல்முதலாக ஒரு தமிழில் சினிமாவில் ஒரு காவிய படத்தை இயக்கியுள்ளார் டூலெட் இந்த படத்தில் குறைந்த நட்சத்திரங்கள் ஒரு வரி கதை திறமையான திரைகதை மூலம் நம்மை ரசிக்க வைத்துள்ளார் இல்லை வாழவைதுள்ளர்.

இந்த படத்தில் சந்தோஷ் ஸ்ரீராம்.ஷீலா ராஜ்குமார்,தருண் குழந்தை நட்சத்திரம் அதிரா பாண்டிலக்ஷ்மி ,ரவிசுப்ரமனியம்,அருள் எழிலன் ,மருதுமோகன் மற்றும் பலர் நடிப்பில் தபஸ் நாயக் இசை வடிவத்தில் கதை திரைகதை ஒளிப்பதிவு இயக்கம் செழியன் படத்தின் தயாரிப்பு பத்மா செழியன். படத்தொகுப்பு ஸ்ரீகர் பிரசாத் இவர்களின் முயற்சியில் வந்து இருக்கும் ஒரு காவியம் தான் டூலெட்

சரிபடத்தின் கதையை பார்ப்போம் ,ஒரு நடுத்தர உதவி இயக்குனர் இளங்கோ இவர் அமுதா என்ற பெண்ணை காதல் திருமணம் செய்கிறார் இவர்களுக்கு சித்தார்த் என்று மகன் அவனை மிக பெரிய அளவில் படிக்கவைக்கவேண்டும் என்பது அமுதாவின் ஆசை அதேபோல ஓரளவுக்கு நல்ல வீட்டில் இருக்க வேண்டும் என்றம் ஆசை ஆனால் இளங்கோ வருமானத்துக்கு அது எதுவும் செய்யமுடியவில்லை இதனால் இஅவர்களுக்குள் எல்லா குடும்பத்திலும் வரும் சின்ன சின்ன சண்டை அந்த சண்டை குறைந்த நேரத்தில் தீர்வுக்கு வரும் இப்படி சந்தோசமாக வாழும் நேர்த்தி கொடுமைகார ஹவுஸ் ஓனர் எடுத்ததுக்கு எல்லாம் குடாராம் சொல்லி வீட்டை காலிசெய்யசொல்கிறார் .

அதுவும் குறைந்த கால அவகாசத்தில் இவர்கலுக்கு இருக்கும் வசதிக்கு இவர்கள் தேடும் வீடு கிடக்க்கவில்லை இதனால் குடும்பத்தில் பிரச்னை அது மட்டும் இல்லாமல் ஹவுஸ் ஓனர் இவர்கள் புழங்கும் நேரத்திலே பலர் இவர்கள் வீட்டை பார்க்க வருகின்றனர். இதனால் இவர்களுக்கு ஏற்படும் அவஸ்தை ஒரு பக்கம் ஒரு பக்கம் நடுத்தர குடும்பத்துக்கு வீடு கிடைப்பது என்பது மிக பெரிய காரியம் ஒரு பக்கம் சாதி அப்புறம் மதம் அடுத்து வருமானம் அடுத்து நிரந்தரமான வேலை இப்படி பல சவால்களை சந்திக்க வேண்டும் இதெல்லாம் மீறி இவர்களுக்கு வீடு கிடைத்தா இதன் நடிவில் இவர்கள் தங்கி இருக்கும் ஹவுஸ் ஓனர் கொடுக்கும் இன்னல்கள் இதை தான் மிகவும் எதார்த்தமாக மிகவும் சுவாரியசமாக கொடுத்துள்ளார் இயக்குனர்

படத்தில் நடித்து இருக்கும் நடிகர்கள் ஒவ்வொருவரும் கதையின் பலத்தை புரிந்து மிகவும் அருமையான நடிப்பை வெளிபடுதியுள்ளர்கள்.

திரைக்கதைக்கு ஏற்ப பின்னணி இசை மூலம் தபஸ் நாயக் நம்மை மிகவும் கவர்ந்து இருக்கிறார் அருமையான ஒளிப்பதுவு அழகான படத்தொகுப்பு இவர்களுடன் மிகவும் அருமையான கதை திரைகதை மூலம் நம்மை மிகவும் கவர்ந்து இருக்கிறார் இயக்குனர் செழியன்

மொத்தத்தில் டூலெட் ஒரு எதார்த்த காவியம் Rank 4.5/5

Related