ராம் பிரகாஷ் ராயப்பா இயக்கத்தில் சுசீந்திரன், மிஷ்கின், விக்ராந்த், அதுல்யா ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் சுட்டுப்பிடிக்க உத்தரவு. இந்த படத்தின் விமர்சனத்தை இங்கே பார்க்கலாம்

வங்கியை கொள்ளை அடித்தவர்களை போலீசார் தேடுவதே, அதன் பின்னர் என்னென்ன நடக்கிறது என்பதே படத்தின் ஒன்லைன் கதையாகும்.

வங்கி கொள்ளையுடன் தொடங்கும் இந்த கதை தொடர்ச்சியான விறுவிறுப்பாக நகர்கிறது. தொடர்ந்து வரும் காட்சிகள் முதல் பாதியை மெதுவாக நகர்கிறது. இடைவேளைக்கு பின்னர் மற்றொரு நாச வேலை சம்பவத்துடன் இணைக்கிறது. படத்தில் பாடல்கள் இல்லாமல் இருப்பது இந்த படத்திற்கு பெரிய பலம்.

படத்தில் இப்ராஹிம் (மிஷ்கின்) தனது கொடுக்கப்பட்ட கேரக்டரை சிறப்பாக நடித்து அசத்தியுள்ளார். வங்கி கொள்ளைக்கு தலைமை வகிக்கும் அசோக் (விக்ராந்த்) நடிப்பும் சிறப்பாக அமைந்துள்ளது. இதுமட்டுமின்றி படத்தின் சண்டைக்காட்சிகள், கேமரா காட்சிகள், பின்னணி இசை, வசனம் போன்றவை சிறப்பாகக அமைந்துள்ளது. குறிப்பாக மிஷ்கின்-காக எழுதப்பட்ட வசனங்கள் வியக்க வைக்கிறது. நடிகை அதுல்யாக்காக வடிவமைக்கப்பட்ட சீன்கள் சிறப்பாக்க வடிவமைக்கப்பட்டுள்ளது.

படத்தின் பிளஸ் : மிஸ்கின், சுசிந்தரன், விக்ராந்தின் சிறந்த நடிப்பு, வாய் பேசமுடியாமல் நடித்திருக்கும் குழந்தையின் நடிப்பு

படத்தின் மைன்ஸ்: தொடக்கத்தில் நடக்கும் காட்சிகள் எதற்காக நடக்கிறது என்பது குழப்பமாகவே இருப்பது, மொட்டை மாடியில் நடக்கும் காட்சிகளை போலீசார் ஒருவர் கண்டு கொள்ளாமல் இருப்பது போன்றவை

மொத்தத்தில், திரில்லர் படத்திற்கான அனைத்து அம்சங்களும் நிறைந்து இருப்பதால், அனைவரும் குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படமாக இருக்கிறது.

Related