மேயாத மான் மற்றும் மெர்குரி படங்களை தயாரித்த படக்குழுவினர் தங்கள் அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்க உள்ளனர். புரோடைக்சன் நம்பர் 3 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படம் எமோசனல்-திரில்லராக உருவாக்க உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் மாதம் கொடைக்கானலில் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாக்க உள்ள இந்த படத்தை திரைக்கதை மற்றும் இயக்கத்தை ஈஸ்வர் கார்த்திக் மேற்கொள்ள உள்ளார் கார்த்திகேயன் சந்தானம், தயாரிக்க உள்ள இந்த படத்தில், போட்டோகிராப்பி டைரக்டர் கார்த்திக் பழனி ஆர்ட் டைரக்டர் சக்தி வெங்கட்ராஜ், காஸ்டியூம் டிசைனர் பல்லவி சிங், சவுண்ட் டிசைனர் தாமஸ் குரியன் ஆகியோர் பணியாற்ற உள்ளனர்.

Related