பெட்ரோமாக்ஸ் திரை விமர்சனம் (ரேட்டிங் 3.5/5)

இயக்குனர் ரோஹின் வெங்கடேசன் இயக்கத்தில் நடிகை தமன்னா, சத்யன், முனீஷ்காந்த், மைம் கோபி, லிவிங்ஸ்டன், பிரேம், காளி வெங்கட் ஆகியோர் நடிப்பில் காமெடி கலந்த பேய் படமாக உருவாகி உள்ளது பெட்ரோமாக்ஸ். இந்த படத்தின் திரை விமர்சனத்தை இங்கே பார்க்கலாம்.

நடிகை நயன்தாராவை தொடர்ந்து, தமன்னாவும் தற்போது ஹீரோ அல்லாத ஹீரோயின் சப்ஜெக்ட் படங்களில் நடித்து வருகிறார். தமன்னா சோலோவாக நடித்துள்ள பெட்ரோமாக்ஸ் படம் ‘அனந்தோ பிரம்மா’ என்ற தெலுங்கு படத்தின் ரீமேக் படமாகும்.

தெலுங்கு வெர்சனை போலவே தமிழிலும் பெட்ரோமாக்ஸ் படம் காமெடி சீன்கள் கொண்ட படமாக உருவாக்கியுள்ளது. தற்போது முன்னணி காமெடியனாக உருவாகி உள்ள யோகி பாபுவின் காமெடியும் இந்த படத்தில் சிறப்பாக உள்ளது.

இந்த படம் பேய் படம் என்றாலும், குழந்தைகள் கூட்டம் அதிகமாகவே இருக்கிறது. லிவிங்ஸ்டன் சில காட்சிகள் மட்டுமே வந்தாலும் அவர் சிறப்பாக நடித்துள்ளார்.

படத்தின் கதை, ஒரு வீட்டுக்குள் மட்டுமே வைத்து நீண்ட நேரம் காட்சிகள் அமைப்பது என்பது ஒரு கடினமான வேலைதான் இருந்தாலும் சலிப்பு தட்டாமல் நல்ல framing பிரேமிங் சென்சுடன் எடுத்திருப்பது இயக்குனரையும் ஒளிப்பதிவாளரையும் பாராட்ட வைக்கிறது.

தானாக கதவு திறப்பது , ஜன்னல் சாத்திக்கொள்வது போன்ற காட்சிகள் பல பல பேய் படங்களில் வந்து அலுப்பு தட்டுகிறது. அந்த படத்தில் வரும் மேக்கிங் ஸ்டைல் பெட்ரோமாஸ் படத்திலும் வேறு விதமாக காட்டி உள்ளது.

இந்த படத்துக்கு மிக பெரிய பலம், காட்சிகளை தூக்கி நிறுத்தும் பாக் கிரௌண்ட் ஸ்கோரிங் தான். ஜிப்ரான் இசையில் சிறப்பாக கலக்கி இருக்கிறார்.

சினிமா பேய், காது கேட்காத பேய் , குடிகார பேய் , எமோஷனல் பேய் என்று அவரவர் கதாபாத்திரங்களை செவ்வெனே செய்து இருக்கிறார்கள். சத்யன் , முனீஷ்காந்த் நல்ல நடிகர்கள் தமிழ் சினிமா இவர்களை இன்னும் நன்றாக பயன் படுத்த வேண்டும். காமெடியுடன் வரும் பேய் கதைகள் வந்துகொண்டே தான் இருக்கிறது – அதில் இதுவும் ஒன்று என்று விட்டு விடாமல் தியேட்டர் சென்று பார்த்து ரசிக்கலாம்.

படத்தின் பிளஸ்: யோகி பாபு காமடி

படத்தின் மைன்ஸ்: தானாக கதவு திறப்பது , ஜன்னல் சாத்திக்கொள்வது போன்ற காட்சிகள்

மொத்தத்தில் பெட்ரோமாக்ஸ் குடும்பத்துடன் சிரித்து பார்க்க வேண்டிய பேய் படம்.