“மிக மிக அவசரம்” – திரைசினிமா விமர்சனம் (சுவாரிசம்) Rank 3.5/5

ஒரு ஆணுக்கு ஒரு பெண்மீது விரோதம். அவன் அவளை எப்படியெல்லாம் பழிவாங்குவான்.

யோசித்துப் பாருங்கள்.

நீங்கள் யோசிக்கிற எதுவுமேயில்லாத புதுவிதமான, குரூரமான பழிவாங்கல் படலமே மிக மிக அவசரத்தின் கதைக்களம்.

பலமணி நேரம் நின்றபடியே பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் பெண் காவலர்களுக்கு ஏற்படும் முக்கிய பிரச்னை குறித்து சிந்தித்ததற்காக படத்தின் இயக்குநர் சுரேஷ் காமாட்சிக்கு பெரிதாய் ஒரு பாராட்டுப் பூங்கொத்து!

கதையின் நாயகி Sriபிரியங்காவுக்கு, படத்தின் பெரும்பாலான காட்சிகளில் தானே வர வேண்டும்; ஒரே இடத்தில் நின்றபடியே நடிக்க வேண்டும் என்ற சவாலான கதாபாத்திரம். முகத்தில் வெளிப்படுத்தும் உணர்ச்சிகளால் அந்த கதாபாத்திரத்துக்கு உயிரூட்டியிருக்கிறார்!

‘வழக்கு எண்’ முத்துராமனுக்கு வழக்கமான கேரக்டர்; நடிப்பும் வழக்கம்போல்!

சீமான் இரண்டொரு காட்சிகளில் எட்டிப் பார்க்கிறார்.

சினிமா பத்திரிகையாளர் காவேரி மாணிக்கம் இந்த படத்தின்மூலம் நடிகராக அறிமுகமாகியிருக்கிறார். பிச்சைக்காரன் வேடம். தோன்றுகிற அரை நிமிடக் காட்சியில் அடையாளம் கண்டுகொள்வதெல்லாம் கஷ்டம்.

சினிமா மக்கள் தொடர்பாளர் குணாவும் நடித்திருக்கிறார்.

Sriபிரியங்காவின் அக்காள் மகளாக வருகிற அந்த குட்டிப் பாப்பா, போலீஸ்காரராக வருகிற ஈ.ராம்தாஸ் உள்ளிட்ட மற்ற நடிகர் நடிகைகளின் நடிப்பு நிறைவு.

கதையோட்டத்தில் கோயில் திருவிழா ஒன்று பிரமாண்டமாக நடக்கிறது. அந்த விழாவில் ஏதோவொரு அசம்பாவிதம் நடக்கப் போவதுபோல் திரைக்கதையை நகர்த்திச் சென்று கிளைமாக்ஸ் நெருங்கும்போது அந்த காட்சிகளுக்கும் கதைக்கும் எந்த சம்பந்தமேயில்லாதபடி கத்தரித்து விட்டிருப்பது ஏனென்று புரியவில்லை!

இருப்பினும் வித்தியாசமான திரைகதை படத்துக்கு மிகவும் உயிருட்டி உள்ளது விறுவிறுப்பான காட்சியமைப்பு படத்துக்கு மிக்க பலம் இலங்கை தமிழர்களை எப்படி நம் எண்ணத்தில் உள்ளனர் என்பதையும் மிக சிறப்பாக காட்டியுள்ளார் இயக்குனர்.

இஷான் தேவ் இசையில் இயக்குநர் சேரன் எழுதிய, பெண்களின் பிரச்னையை மையப்படுத்திய பாடல் ஈர்க்கிறது.

மொத்தத்தில் மிக மிக அவசரம் சுவாரிசம் Rank 3.5/5