பழனியில் இன்று  #VSP33 இனிதே நல்துவக்கம்… சந்திரா ஆர்ட்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்கத்தில் விஜய்சேதுபதி  அமலாபால் நடிக்கும் புதிய படம் VSP 33
விஜய்சேதுபதி  அமலாபால் முதன்முறையாக இணைந்து நடிக்கின்றனர்

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கும் 33 வது படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு இன்று தொடங்குகிறது. தொடர்ந்து படக்குழுவினர் ஊட்டிக்கு சென்று படப்பிடிப்பை தொடர திட்டமிட்டுள்ளனர். ஆனால் முதல் பாடல் காட்சி பிரமாண்ட அரங்கில் பழனியில் இன்று ஆரம்பித்தது.

முதலில் படத்தின் முக்கிய பாடல்காட்சி மிக பிரமாண்டமான பொருள் செலவில் நூற்றுக்கும் மேற்பட்ட நடன கலைஞர்கலுடன் கல்யான் மாஸ்டர் நடன அசைவில் இன்று ஆரம்பித்தது குறிப்பிடவேண்டிய விஷயம். அதோடு இந்த முதல் பாடல்காட்சியை கல்யான் மாஸ்டர் தான் இயக்கவேண்டும் என்று விஜய் சேதுபதியின் ஆசை நிறைவேற்றியுள்ளார் கல்யான் மாஸ்டர் இந்த பாடல் காட்சி கிட்டத்தட்ட மூன்று நாட்கள் படமாக்க திட்டமிட்டுள்ளனர் என்று சொல்லபடுகிறது .


இப்படத்தை சந்திரா ஆர்ட்ஸ் சார்பாக மிகுந்த பொருட் செலவில் பிரம்மாண்டமாக இசக்கி துரை தயாரிக்கிறார்.
பேராண்மை, புறம்போக்கு படங்களில் இயக்குநர் எஸ்.பி ஜனநாதனிடம் பணியாற்றிய வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
தனது உதவியாளர் இயக்குநராக அறிமுகமாகும் இப்படத்தை எஸ்.பி ஜனநாதன் க்ளாப் அடித்து படப்பிடிப்பை தொடங்கி வைக்கிறார்.
கிறிஸ்துமஸ், புத்தாண்டு வருடம், காதல், இசை என கொண்டாட்டங்களை உள்ளடக்கிய இந்த கதையில் சர்வதேசஅளவிலான பிரச்சனையும் மையமாக பேசப்பட இருக்கிறது. இதில் விஜய் சேதுபதி இசை கலைஞராக நடிக்கிறார்.
இப்படத்தின் பெயரை சஸ்பென்ஸாக வைத்திருக்கும் படக்குழுவினர் தற்காலிகமாக VSP 33 என்று படத்திற்கு பெயர் வைத்துள்ளனர்.
VSP 33 யில் முன்னணி கதாநாயகி மற்றும் ஒரு வெளிநாட்டு பெண்ணும் கதாநாயகிகளாக நடிக்கவுள்ளனர். இதில் நடிக்க இருக்கும் நடிகர் நடிகைளை புது வித பாணியில் அறிமுகப்படுத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம்:

Related