கதிர் நடிக்கும் “ஜடா ” டிசம்பர் 6 ல் வெளியீடு.

 


நடிகர் கதிர் நடிப்பில் அறிமுக இயக்குனர் குமரன் இயக்கத்தில் பொயட்ஸ்டுடியோ தயாரிக்கும் படம் “ஜடா”

படத்தின் இறுதிக்கட்ட பணிகளை முடித்து வெளியீட்டிற்கு தயாராக இருக்கும் ஜடா படத்தில் யோகிபாபு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.
யோகிபாபு வரும் நகைச்சுவைக்காட்சிகள் மிகச்சிறப்பாக வந்திருக்கிறதாம்.
விளையாட்டு கூடவே நகைச்சுவை சஸ்பென்ஸ் நிறைந்த படமாக இருக்கும் .

அனிருத் ஒரு பாடலை சாம் CS இசையில் பாடியிருக்கிறார். அந்தப்பாடல் இந்த வருடத்தின் ஹிட் பாடலாக இருக்கும் என்று படக்குழுவினர் நம்பிக்கைதெரிவிக்கின்றனர்.
படத்தின் வியாபாரமும் கிட்டதட்ட முடிவடைந்த நிலையில் டிசம்பர் 6ம் தேதி வெளியிடுவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.