நடிகர் விக்ரம் நடித்து இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள கடாரம் கொண்டான் படத்தின் திரை விமர்சனத்தை இங்கே பார்க்கலாம்

குற்றவாளி ஒரவர் காயம் பட்டு ஹாஸ்பிடல் வருகிறான். அங்கு வேலை பார்க்கும் டாக்டரின் மனைவியை கடத்தி அந்த குற்றவாளியை வெளியே அழைத்து வரச் சொல்கிறார்கள். ஒரு பக்கம் அந்த குற்றவாளியை கொல்ல ஒரு கும்பல் சுத்துகிறது. இன்னொரு பக்கம் காவல் துறை துரத்துகிறது. இதன் பின்னணியில் என்ன நடந்தது. அந்த டாக்டரின் மனைவி காப்பாற்றப்பட்டாரா? அந்த குற்றவாளியும், டாக்டரும் தப்பித்தார்களா? என்பது தான் கதை.

2010ல் வெளிவந்த ஸ்பானிஷ் திரைப்படம் Point blank. இப்படத்தின் அதிகாரப்பூர்வ மறுதயாரிப்புகாக வந்திருக்கிறது கடாரம் கொண்டான். கதை, திரைக்கதையில் எந்த பெரிய மாற்றங்களும் இல்லை. அதுவே பெரும் ஆறுதல். Point blank சீட் எட்ஜ் திரில்லர் வகையை சார்ந்தது. அதே போல் தமிழிலும் படத்தின் முதல் காட்சியிலேயே பரபரப்பு ஆரம்பித்து விடுகிறது. படத்தை தமிழுக்கு மாற்றியதில் அதன் பின்னணியை மலேசியாவுக்கு மாற்றியது நல்ல ஐடியா. கதையின் தன்மை அடித்தட்டு ரசிகனுக்கு புரியாமல் போய்விடும் அபாயம் அதிகம் இருக்கிறது.

படத்தை தமிழில் மேம்படுத்துகிறேன் பேர்வழி என எந்தக் கோக்கு மாக்கும் செய்யாமல் எடுத்ததே ஒரு பரபர திரில்லர் அனுபவத்தை தருகிறது. ஆனால், படத்தில் பல இடங்களில் லாஜிக் சொதப்பல்கள்.

ஊர் முழுவதும் தேடப்படும் குற்றவாளி காவல் துறை நிலையத்திற்குள் சாதரணமாக நுழைவது எப்படி? விக்ரம் உண்மையில் யார்? அவர் என்ன தான் செய்கிறார்? பயணமே செய்யக்கூடாத கர்ப்பிணி 10 நாட்கள் முன் தான் மலேசியா வந்திருக்கிறார் எப்படி? என பல கேள்விகளுக்கு படத்தில் விடையில்லை. கதாபாத்திரம்களின் பின்னணி சரியாக தெளிவுபடுத்தப்படவில்லை.

விக்ரம் நீண்ட நாட்களுக்கு பிறகு ஸ்டைலீஷ் ஆக்‌ஷனில் கலக்கியிருக்கிறார். பாதி நேரங்களில் டயலாக்கை கண்களில் பேசிவிடுகிறார். அக்‌ஷரா ஹாசன் தன் பாத்திரத்தை அழகாக செய்துள்ளார். அபி இதில் மிக முக்கியமான பாத்திரம்.

இயக்கம் ராஜேஷ் எம் செல்வா அவர் இயக்கிய முதல் படத்தில் கமல் ஹாசன் இரண்டாவதில் விக்ரம். இரண்டுமே ஆக்‌ஷன் தழுவல்கள்.ஜிப்ரான் வழக்கம் போல் கலக்கியிருக்கிறார்.ஶ்ரீனிவாஸ் ஒளிக்கருவி (கேமரா) ஆகஷன் காட்சிகளில் மட்டுமில்லாமல் படம் முழுக்க சிறப்பாக இருக்கிறது.

படத்தின் பிளஸ்: விக்ரமின் நடிப்பு, திரைக்கதை

படத்தின் மைனஸ்: லாஜிக் மிஸ்ஸிங்

மொத்தத்தில்,  மிரட்டல் இந்த படம்,   ரசிகர்களை வெகுவாக கவரும்.

Related