தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகி வரும் படம் அசுரன். பூமணி எழுதிய வெட்கை என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வரும் இந்த படம் வருகிற அக்டோபர் 4 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.

இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்த படம் குறித்து இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கம் வாயிலாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், இந்த படத்தின் பின்னணி இசை அமைக்கும் பணி தொடங்கிவிட்டதாக அறிவித்துள்ளார். மேலும் இந்த படம் வருகிற அக்டோபர் 4 ஆம் தேதி வெளியாகவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

 

Related