Shooting Spot News & Gallerys

பெரிய நட்சத்திரங்கள் இணையும் ரியோ ராஜ், ரம்யா நம்பீசன் நடிக்கும் காமெடி சரவெடி படம் !

Shooting Spot News & Gallerys
சமீபத்தில் வெற்றிகொடிநாட்டிய “நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா” படத்தின் மூலம் பிரபலமாகியுள்ள நாயகன் ரியோ ராஜ் தனது அடுத்த படத்தில் காமெடியில் கலக்க உள்ளார். ரம்யா நம்பீசன் நாயகியாக நடிக்கும் இந்தப்படத்தில் மேலும் பல பெரிய நட்சத்திரங்கள் இணைவதாக படக்குழு அறிவித்துள்ளது. தற்போது இணைந்திருக்கும் பெரும் நட்சத்திர பட்டாளம் இப்படம் காமெடிக்கு எந்த பஞ்சமும் வைக்கப் போவதில்லை என்பதை உறுதி செய்கிறது. M S பாஸ்கர், சந்தான பாரதி, பால சரவணன், ரேகா, லிவிங்ஸ்டன், விஜி சந்திரசேகர், ரோபோ சங்கர், முனீஸ்காந்த், ஆடுகளம் நரேன், பழைய ஜோக் தங்கதுரை, மதுரை சுஜாதா ஆகியோருடன் மேலும் பலர் இப்படத்தில் இணைகிறார்கள். எல்லாதரப்பையும் கவரும் பல தரப்பட்ட நட்சத்திரங்கள் இணைவது படத்தின் வெற்றியை உறுதி செய்வதுடன் 90 கிட்ஸ் மற்றும் 2K கிட்ஸ் என இரு சந்ததியையும் ஒருங்கே கவரும் என்பதை அழுத்தி சொல்கிறது. தயாரிப்பாளர்

நடராஜா போஸில் வெளியிடப்பட்டுள்ள ‘83 திரைப்படத்தின் கபில் தேவாக நடித்துள்ள ரன்வீர் சிங்கின் விசித்திரமான உருவ ஒற்றுமை உங்களுக்கு சிலிர்ப்பூட்டும்

Shooting Spot News & Gallerys
நடராஜா போஸில் வெளியிடப்பட்டுள்ள ‘83 திரைப்படத்தின் கபில் தேவாக நடித்துள்ள ரன்வீர் சிங்கின் விசித்திரமான உருவ ஒற்றுமை உங்களுக்கு சிலிர்ப்பூட்டும். ’83 திரைப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு வேலைகளை படக்குழுவினர் மும்பையில் நிறைவு செய்திருக்கின்றனர். ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில், கபிலை ஒத்திருக்கும் வகையில் ரன்வீர் சிங்கின் நடராஜா போஸ் கொண்ட போஸ்டரை வெளியிட்டு மகிழ்ந்தனர். அது டுன்ப்ரிட்ஜ் வெல்ஸ் மைதானத்தில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் கபில் தேவ் 175 ரன்கள் குவித்த போட்டியின் ஒரு ஆகச்சிறந்த புகைப்படம். அந்த இந்தியா – ஜிம்பாப்வே போட்டி, மிகவும் மறக்கமுடியாத போட்டிகளில் ஒன்றாக இன்றும் கிரிக்கெட் வரலாற்றில் இடம் பெற்றிருக்கிறது. மேலும் அந்த போட்டியானது  எந்த ஒரு தொலைக்காட்சியிலும் ஒளிப்பரப்பப்படவும் இல்லை, பதிவு செய்யவும் பட்டிருக்கவில்லை. ரன்வீர் சிங்கி
யோகிபாபு நடிப்பில் “ பட்லர் பாலு நவம்பர் 8 ம் தேதி வெளியாகஉள்ளது

யோகிபாபு நடிப்பில் “ பட்லர் பாலு நவம்பர் 8 ம் தேதி வெளியாகஉள்ளது

Shooting Spot News & Gallerys
நவம்பர்  8 ம் தேதி வெளியாக உள்ளது “ பட்லர் பாலு “தமிழகமெங்கும் முகேஷ் பிலிம்ஸ் வெளியிடுகிறது காமெடியில் கொடி கட்டிப்பறக்கும் யோகிபாபு தர்மபிரபு, கூர்கா, ஜாம்பி ஆகிய படங்களைத் தொடர்ந்து தற்போது  "பட்லர் பாலு" எனும் படத்தில் காமெடியனாக முக்கிய கதாபாத்திரத்தில்   நடித்துள்ளார். அவரோடு இமான் அண்ணாச்சியும் இணைந்துள்ளார்.  மற்றும் மயில்சாமி, ரோபோசங்கர், தாடிபாலாஜி ஆகியோரும் நடித்துள்ளனர்.   முழுக்க முழுக்க நகைச்சுவையை அடித்தளமாக கொண்ட இப்படத்தில் யோகிபாபுவிற்கு கல்யாண வீடுகளில் சமையல் செய்யும் சமையள் காரர் வேடம். எப்படி நடிகர் நாகேஷுக்கு சர்வர் சுந்தரம் படம் மிக முக்கியமான படமாக அமைந்ததோ அதுபோல் யோகிபாபுவிற்கு இந்த “ பட்லர்பாலு “ படம் அமையும் என்கிறார்கள். இதுவரை ஏற்காத ஒரு வேடத்தில் யோகிபாபு தோன்ற சமையல் வேலைக்காக சென்ற  திருமண மண்டபத்தில்  மணப்பெண்ணை யோகிபாபுவின் நண்பர்கள் கடத்தி  வி
நந்திதா ஸ்வேதாவின் அதிரடி சண்டைக்காட்சிகள் நிரம்பிய IPC 376

நந்திதா ஸ்வேதாவின் அதிரடி சண்டைக்காட்சிகள் நிரம்பிய IPC 376

Shooting Spot News & Gallerys, Top Highlights
பெண்களை மையப்படுத்திய கதைகள் தமிழ்சினிமாவில் இப்போது அதிகமாக வரத்துவங்கியுள்ளது. சஸ்பென்ஸ் ஹாரர் என நிறைய படங்கள் பெண்களை மையப்பாத்திரங்களாக கொண்டு வெளியாகி  வெற்றிபெற்றும் வருகின்றன.  இது தமிழ்சினிமாவில் நல்ல தருணமாகப் பார்க்கப்படுகிறது. இந்தத்தருணத்தில் நந்திதா ஸ்வேதா நடிப்பில் IPC 376 என்ற ஆக்‌ஷன் ஹாரர் கலந்த மாஸ் கமர்சியல் படம் உருவாகி வருகிறது. அட்டக்கத்தி படத்தில் இருந்தே தனது நடிப்பால் தனக்கென ஒரு நிரந்தர இடத்தை ரசிகர்களிடையே பிடித்துள்ள நந்திதா ஸ்வேதா இதில் நாயகியாக நடித்து வருகிறார். படத்தில் ஆக்‌ஷன் காட்சிகள் அதிகமாக உள்ளதாம். நான்கு சண்டைக்காட்சிகள் உள்ள இப்படத்தில் பெரும்பாலும் டூப் இல்லாமலே துணிச்சலாக நடித்துள்ளார் நந்திதா ஸ்வேதா. சூப்பர் சூப்பராயன் அமைத்த சண்டைக்காட்சிகள் மிகச்சிறப்பாக வந்துள்ளதாக தகவல். சண்டைக்காட்சிகளில் நந்திதா ஸ்வேதாவுக்கு ரத்தக்காயம் ஏற்பட்ட போது

காதலன் டார்சார் தாங்காமல் இரண்டாவது நாளே படப்பிடிப்பை விட்டு ஓடிய ஹீரோயின்

Shooting Spot News & Gallerys
  பிளூமிங் ஆர்ட் ஸ்டுடியோ சார்பில் ஆறு ராஜா தயாரித்துள்ள படம் பாப்பிலோன். இந்த படத்தை தயாரித்துள்ளதுடன் கதாநாயகனாக நடித்து படத்தை இயக்கியும் இருக்கிறார் ஆறூ ராஜா. பாப்பிலோன் என்றால் தமிழில் வண்ணத்துப்பூச்சி என அர்த்தமாம். அப்பா இல்லாத தனது குடும்பத்தை அன்பாக கவனித்து வருகிறார் ஹீரோ. எதிர்பாராமல் அவரது தங்கையின் வீடியோ ஒன்று கயவர்களின் கையில் சிக்குகிறது.. அவர்கள் அதன்மூலம் தங்கையை பிளாக்மெயில் செய்து பணம் பறிப்பதுடன், ஒரு கட்டத்தில் அவரை கடத்தவும் முயற்சிக்கின்றனர்.. இதில் விபத்தில் சிக்கி கோமா நிலைக்குச் செல்கிறார் தங்கை.. கதாநாயகி மூலம் இந்த விபரம் அண்ணனுக்கு தெரியவர, இதன் பின்னணியில் உள்ள கும்பலை எப்படி வேரறுக்கிறார் என்பதுதான் படத்தின் கதை. கதாநாயகியாக ஸ்வேதா ஜோயல் என்பவர் நடித்துள்ளார். தங்கையாக சௌமியா மற்றும் அம்மாவாக ரேகா சுரேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். பண்ணையார் கதா

அமெரிக்க கோல்டன் குளோப்பில் பாராட்டு பெற்ற “பார்த்திபனின் ஒத்த செருப்பு” சைஸ் 7 படம் !

Shooting Spot News & Gallerys
இராதாகிருஷ்ணன் பார்த்திபன் தமிழ் சினிமாவின் அடையாளமாக, பல பரிசோதனை முயற்சிகளுக்கு முன் மாதிரியாக, வெற்றியாளராக விளங்குபவர். அவரது சமீபத்திய படமான “ஒத்த செருப்பு சைஸ் 7” ரசிகர்களின் இதயங்களை அள்ளியதோடல்லாமல் Asia and India Book of Records ல் ஒருவரால் இயக்கி, நடித்து தயாரித்து உருவாக்கப்பட்ட படம் என்கிற சாதனைக்காக பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் அமெரிக்காவில் கோல்டன் குளோப் ஜீரி மெம்பர்களுக்காக நிகழ்த்தப்பட்ட திரையிடலில் பெரும் பாராட்டை குவித்துள்ளது. மாறுபட்ட முயற்சியாக அனைவரும் இப்படத்தினை பாராட்டியுள்ளனர். மேலும் ஆஸ்கர் அகாடமி குழு நாளை அக்டோபர் 24 அன்று இப்படத்தை பார்க்கவுள்ளது மேலும் தமிழ் சினிமாவுக்கு மேலும் பெருமைகொள்ளும் தருணமாக உள்ளது. இது பற்றி இயக்குநர் பார்த்திபன் கூறியதாவது..., நான் முன்பே பலமுறை கூறியது போல் “ஒத்த செருப்பு சைஸ் 7” படத்தின் உருவாக்கம் என்ப

சிபிராஜ் நடிக்கும் சஸ்பென்ஸ், எமோஷனல் திரில்லர் படத்திற்கு ‘கபடதாரி’ என்று பெயர் அறிவிப்பு

Shooting Spot News & Gallerys
கிரியேட்டிவ்  என்டர்டெயின்மெண்ட் அண்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் வழங்கும் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் சிபிராஜ் நாயகனாக நடிக்கும் சஸ்பென்ஸ், எமோஷனல் திரில்லராக உருவாகும் படத்திற்கு இதுவரை பெயர் சூட்டப்படாமல் இருந்தது. தற்போது அப்படத்திற்கு 'கபடதாரி' என்று பெயர் வைத்திருக்கிறார்கள். ‘கபடதாரி’ என்றால் பாசாங்குக்காரன்/வேஷக்காரன் என்று பொருள். சிபிராஜுடன் நாசரும் நடிப்பதாக முடிவாகிவிட்ட நிலையில் சமீபத்தில் சிபிராஜ் ஜோடியாக நந்திதா ஸ்வேதா ஒப்பந்தமாகியிருந்தார். இவர்களுடன் ஜெயபிரகாஷ், ஜே.சதிஷ் குமார், மயில்சாமி மற்றும் சில முக்கிய நடிகர்கள் நடிக்கிறார்கள். சிபிராஜ் இதுவரை நடித்த ஏற்று நடித்த பாத்திரங்களை விட இந்த படத்தில் முக்கியமான மற்றும் வித்தியாசமான கதாபாத்திரமாக இருக்கும் என்கிறார் இப்படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் Dr. கோ. தனஞ்செயன். லலிதா தனஞ்செயன் படத்தைத் தயாரிக்க, பிரதீப

24 மணி நேரத்தில் நடக்கும் கிரைம் திரில்லர் ‘எதிர் வினையாற்று’

Shooting Spot News & Gallerys
தமிழ் சினிமாவில் சமீபகாலமாக கிரைம் திரில்லர் வகை படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வரிசையில் முழுக்க முழுக்க வித்தியாசமான கதைக்கருவுடன் திருப்பங்கள் நிறைந்த திரைக்கதையில் ‘எதிர் வினையாற்று’ படம் உருவாகி உள்ளது. எந்த வம்புக்கும் செல்லாமல் தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருக்கும் போட்டோகிராபர் ஒரு நள்ளிரவு பயணத்தில் எதிர்பாராத விதமாக ஒரு பெண்ணை காப்பாற்றுகிறான். அந்த பெண்ணுடன் சேர்ந்து அவள் கொண்டு வரும் சிக்கல்களும் அவனை பின் தொடர்கின்றன. சாதாரண இளைஞனான அவன் மிகவும் அசாதாரண சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறான். அதில் இருந்து அவன் எப்படி மீண்டு வருகிறான்? என்பதே எதிர் வினையாற்று படத்தின் கதை. இன்று இரவு தொடங்கி நாளை இரவுக்குள் 24 மணி நேரத்தில் நடக்கும் சம்பவங்களே விறுவிறுப்பான திரைக்கதையாகி உள்ளது. சென்னையில் 2 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த உண்மை சம்பவத்தை அந்த நபரின் அனுமதிய

விஜய்சேதுபதியுடன் பிரம்மாண்டமாக கொண்டாடிய அம்ரீஷின் பிறந்தநாள் விழா

Shooting Spot News & Gallerys
நடிகை ஜெயசித்ரா இல்லத்தில் விஜய்சேதுபதியுடன் பிரம்மாண்டமாக கொண்டாடிய அம்ரீஷின் பிறந்தநாள் விழா ‘நானே என்னுள் இல்லை’ என்ற படம் மூலம் தனது இசைப்பயணத்தைத் தொடங்கிய இசையமைப்பாளர் அம்ரீஷ், ‘மொட்ட சிவா கெட்ட சிவா’, ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’, ‘சார்லி சாப்ளின் 2’, ‘பொட்டு’, ‘சத்ரு’ போன்ற படங்களுக்கு இசையமைத்தார். தற்போது, ‘கர்ஜனை’, ‘யங் மங் சங்’, ‘வீரமாதேவி’, ‘பரமபத விளையாட்டு’, ‘கா’ போன்ற படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இவரின் பிறந்தநாளை அவரது அம்மா மற்றும் நடிகை ஜெயசித்ரா நேற்று பிரம்மாண்டமாக கொண்டாடினார். இந்த விழாவில் விஜய் சேதுபதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அம்ரீஷ்-க்கு வாழ்த்து கூறினார். தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ், டி.சிவா, நமிதா, இயக்குநர் சாய் ரமணி, இயக்குநர் ரத்னா சிவா, படத்தொகுப்பாளர் கிஷோர் ஆகியோரும் கலந்து கொண்டு தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்கள்.

சிவாஜிக்கு வாழ்த்துப்பாடல் வாசித்த சிவக்குமார் !

Shooting Spot News & Gallerys
அக்டோபர் -14-ந்தேதி காலை 9மணிக்கு எத்திராஜ் கல்லூரி அரங்கத்தில் சிவாஜியின் வாழ்க்கை வரலாற்றை  மையபடுத்தி  இன்பா என்ற இளைஞர்   எழுதிய “சிவாஜி ஆளுமை பாகம் நான்கு” என்ற நூலை, நடிகர் சிவகுமார் அவர்கள் வெளியிட்டு வாழ்த்தி பேசினார்.மேலும்,முன்னாள் தமிழக அரசு செயலர் ராஜேந்திரன்,முனைவர் ராஜாராம். நடிகர்  சித்ரா லட்சுமணன்,மக்கள் குரல் ராம்ஜி ,  கொடைக்கானல் காந்தி எத்திராஜ் கல்லூரி முதல்வர்  கோதை ,வரலாற்று துறை தலைவர்  கவுசல்யா குமாரி ,எழுத்தாளர் .ம .ஸ்வீட்லின், எழுத்தாளர்  லதா சரவணன்  ஆகியோர் கலந்துகொண்டனர். இவ்விழாவில் பேசிய சிவக்குமார் சிவாஜியின் பட வசனங்களையும், ராமாயண, மாகபாரத மேற்கோள் பாடல்களையும் தன்குரலில் பேச அரங்கம் அதிர்ந்தது. அவர் ஆற்றிய உரையிலிருந்து... இந்த நிகழ்வு இங்கு  நடப்பதற்கான முழுமுதல் காரணம் இன்பா. நான் சிவாஜியுடன் நிறைய படங்கள் நடித்திருந்தாலும், சிவாஜி பற்ற