டிஜிட்டல் மீடியம் பலமாக வளர்ந்து இந்த சூழலில் வட இந்தியாவை போலவே தென்னிந்திய பிரபலங்களும் டிஜிட்டல் மீடியத்தில் களமிறங்கி வருகிறார்கள். OTT எனும் டிஜிட்டல் மீடியத்தில் தற்போது தமிழ், தெலுங்கு சினிமா பிரபலங்களின் படங்களும், வெப் சீரிஸ்களும் வரிசைகட்டி களமிறங்குகின்றன. இந்த வரிசையில் உலகின் நம்பர் 1 டிஜிட்டல் மீடியமான நெட்ஃபிளிக்ஸில் ஒரு புதிய படத்திற்காக தற்போது அமலா பால் இணைந்திருக்கிறார். ஆந்தாலஜி முறையில் உருவாகும் இப்படத்தில் அமாலா பால் நடிக்கும் பகுதியை நந்தினி ரெட்டி இயக்குகிறார்.
இது பற்றி நடிகை அமலா பால் தெரிவிக்கையில், கடந்த சில வருடங்களாக நான் மிகவும் வித்தியாசமான சாவால் நிறைந்த காதாபாத்திரங்களையே தேர்வு செய்து நடித்து வருகிறேன். ரசிகர்கள் புதிய சிந்தனைக்கு எப்போதும் பெரும் வரவேற்பும் மதிப்பும் தருகிறார்கள். ஆடை படத்திற்கு அவர்கள் தந்த வரவேற்பும் ஆதரவும் மேலும் இன்னும் அதிகமாக புதியதை செய்ய என்னைத் தூண்டியுள்ளது. அந்த வழியில் முன்னெப்போதும் இல்லாத வகையில் என் சினிமா பயணத்தில் அடுத்ததொரு புதிய கதாப்பாத்திரத்தில் நடிக்க இருக்கிறேன். அதிலும் மிகுந்த திறமைவாய்ந்த பெண் இயக்குநரான நந்தினி ரெட்டி போன்றவருடன் பணிபுரிவது எனக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்திருக்கிறது. “ஓ பேபி” முதலாக அவரது வெற்றிப்படங்களுக்கு நான் ரசிகை. பெண்களை மையமாக கொண்டு கதை சொல்லும் அவரது இயக்கத்தில் நடிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன். என்னை இந்த திரைப்படத்திற்காக தேர்வு செய்தமைக்கு நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்திற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். உலகின் முன்னணி (OTT ) டிஜிட்டல் மீடியமாக விளங்கும் நெட்ஃபிளிக்ஸின் தென்னிந்திய வருகை, இங்கே பல புதிய மாற்றங்களையும், கதைகளில் கருக்களில், எதாத்தமான படைப்புகளை உருவாக்கும் என நம்புகிறேன். இந்த மாற்றத்தின்  ஆரம்பகட்டத்திலேயே நெட்ஃபிளிக்ஸ் உடன் இணைந்ததில் மேலும் பெருமை கொள்கிறேன். எல்லோரும் எனக்கு உங்கள் ஆதரவை தொடர்ந்து அளிப்பீர்கள் என நம்புகிறேன் நன்றி என்றார்.

Related