மோனிகா என்பவர் ஒரு இந்தியா நடிகையாவார். இவர் தன்னுடைய திரை வாழ்க்கையை தமிழ் மொழிப் படங்களில் துவங்கினார். 1990களில் குழந்தை நட்சத்திரமாகவும், 2000ல் திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்தார். அழகி திரைப்படம் மூலமாக புகழ்பெற்ற நடிகையானார். அதையடுத்து இம்சை அரசன் 23ம் புலிகேசி மற்றும் சிலந்தி ஆகிய படங்களிலும் நடித்து புகழ்பெற்றார். சமீபத்தில் தன்னுடைய பெயரை பார்வனா என்று மாற்றம் செய்தார்; ஆனால் 5/30/2014 அன்று இவர் இசுலாம் மதத்துக்கு மாறியுள்ளதால் தன் பெயரை ரகிமா என மாற்றிக் கொண்டார்.

இவர் நடித்த படங்கள்: அவசரப் போலிஸ் 100, பிரம்மா, என்றும் அன்புடன், பாண்டியன், சக்கரைத் தேவன்,என் ஆசை மச்சான், வரவு எட்டணா செலவு பத்தணா,சதி லீலாவதி, இந்திரா, செல்லக்கண்ணு, ஆசை, மூவேந்தர், லவ் சேனல்,அழகி, காதல் அழிவதில்லை, இனிது இனிது காதல் இனிது, ஜன்னல் ஓரம்

Related