முரளி தமிழ்த் திரைப்பட நடிகர். கர்நாடக மாநிலம், பெங்களூரைச் சேர்ந்த இவர் அறுபதுக்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். இவர் 1984 -ல் வெளி வந்த பூவிலங்கு எனும் திரைப்படம் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார். 1990-ல் வந்த “புது வசந்தம்”, 1991 -ல் வந்த “இதயம்”, படமும் இவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது. “கடல் பூக்கள்” என்ற திரைப்படத்தில் நடித்ததற்காக தமிழக அரசின் சிறந்த நடிகர் விருதை பெற்றார்.

முரளியின் தந்தை சித்தலிங்கையா கன்னடர் ஆவார். அவர் பல படங்களை‌த் தயா‌ரித்துள்ளார். முரளியின் தாயார் தமிழகத்தைச் சேர்ந்தவர். முரளிக்கு ஷோபா என்ற மனைவியும், அதர்வா, ஆகா‌ஷ்‌ என்‌ற இரு மகன்களும், காவ்யா என்ற ஒரு மகளும் உள்ளனர். அதர்வா தற்போது தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகராக உள்ளார். இவர் வண்ணார் சமுகத்தை சேர்ந்தவரவார்.

இவர் சிவாஜி கணேசன், விஜயகாந்த், பிரபு, கார்த்திக், சத்யராஜ், பிரபுதேவா, சூர்யா, பார்த்திபன், மம்மூட்டி, சரத்குமார் உள்ளிட்ட பல முன்னணி கதாநாயகர்களுடனும் மீனா, சிம்ரன், ரோஜா, தேவயானி, லைலா, ரம்பா உள்ளிட்ட முன்னணி கதாநாயகிகளுடனும் இணைந்து நடித்துள்ளார்.

இவர் அ.தி.மு.கவில் இணைந்து அரசியலிலும் ஈடுபட்டார். இக்கட்சிக்காகத் தேர்தலில் சுற்றுப்பயணம் செய்து பிரசாரமும் செய்தார்.

Related