நடிகர் அஜித்தின் பெருந்தன்மையை பார்த்து பிரபல பாலிவுட் நடிகை வித்யா பாலன் வியந்துபோனதாக தகவல் வெளியாகியுள்ளது.

மறைந்த நடிகை ஸ்ரீதேவி கணவர் போனி கபூர் தயாரிக்கும் ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்தை ‘தீரன் அதிகாரம் ஒன்று’ இயக்குநர் ஹெச்.வினோத் இயக்குகிறார்.  ஹிந்தியில் அமிதாப் பச்சன் நடித்த ‘பிங்க்’ திரைப்படத்தின் ரீமேக்கான இப்படத்தில் அஜித்துடன் வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடாச்சலம், ஆண்ட்ரியா தாரியங், ரங்கராஜ் பாண்டே, ஆதிக் ரவிச்சந்திரன், அர்ஜுன் சிதம்பரம், சுஜித், அஸ்வின் ராவ்,டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.

இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் அஜித்தின் மனைவி கதாபாத்திரத்தில் நடிகை வித்யா பாலன் நடித்துள்ளார். இப்படத்தின் ஷூட்டிங்கின் போது நடந்த ஒரு சம்பவம் குறித்து தேசிய ஊடகம் ஒன்றுக்கு கிடைத்த தகவலின்படி, அஜித்தின் பெருந்தன்மையை பார்த்து நடிகை வித்யா பாலன் வியந்துள்ளார். ‘ஒரு நாள் ஷூட்டிங்கின் போது, அஜித்தின் காட்சிகள் முடிந்துவிட்டதாம். வித்யா பாலன் நடிக்க வேண்டிய காட்சிகள் முடியவில்லையாம். தனது காட்சி முடிந்துவிட்டதே என்று கிளம்பாமல், வித்யா பாலனின் காட்சிகள் முடியும் வரை காத்திருந்து வழியனுப்பி வைத்துவிட்டு பின் அவர் புறப்பட்டுச் சென்றாராம்’. அஜித்தின் இந்த செயல் வித்யா பாலனை நெகிழச் செய்ததாக தெரிகிறது.

அஜித்துடன் பணியாற்றிய அனுபவம் குறித்து பேசும் பிரபலங்கள் பலரும், அஜித்தின் எளிமை, அனைவருக்கும் மரியாதை கொடுக்கும் தன்மை, அவரது பிரியானி என பலரும் கூற கேட்டிருக்கிறோம். தற்போது அஜித்தின் பெருந்தனமையை பார்த்து வியந்ததாக வித்யா பாலன் கூறியிருப்பது அஜித் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Related